பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இன்று கூடி கலந்துரையாடினர்
பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் விளைவிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிராக மக்கள் பக்கம் நின்று மக்களின் குரலாக ஒலிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இன்றைய சந்திப்பில், அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
