மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய இந்தியாவின் ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது
மகாராஸ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரில் உள்ள சத்ரபதி நகரில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு 17 வயதில் ஒரே மகள் இருந்தார். இந்த சிறுமி நாக்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவர் படிப்பில் சிறந்து விளங்கி உள்ளார். இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார்.
நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்றார்.
அப்போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குடும்பத்தினர் மாணவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்
தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மாணவி கல்லால் செய்யப்பட்ட கத்தியால் கை, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
மேலும் போலீசார் மாணவியின் தற்கொலை குறித்து விசாரித்தபோது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
மாணவி படிப்பில் சிறந்து விளங்கிய போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்து உள்ளார்.
மேற்கத்திய கலாசாரத்திலும் அதீத ஆர்வம் காட்டி உள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல செல்போனில் மூழ்கிய மாணவி, ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்.
வெளிநாட்டு கலாசாரம் பற்றியும் ஆன்லைனில் அதிகம் தேடிப்பார்த்து இருக்கிறார்.
இதையடுத்து மாணவிக்கு விபரீத சிந்தனைகள் உருவாகின.
‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை தெரிந்து கொள்வதில் மாணவி அதீத ஆர்வம் காட்டினார்.
இதனை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டு இருக்கிறார்.
ஆண்மையில் அவர் ஒன்லைனில் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்தும் கல்லால் செய்யப்பட்ட கத்தியை ஓடர் செய்தார்.
அந்த கத்தியால் தான் அவர் தற்கொலை செய்து உள்ளார்.
மாணவி கத்தியை பயன்படுத்தி கையின் மணிக்கட்டு பகுதியில் 5 முறை அறுத்து உள்ளார்.
இறுதியில் அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என பிளஸ்-2 மாணவி ஒருவர் ஒன்லைனில் தேடிப்பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மகளை இழந்த மாணவியின் பெற்றோர் மீள முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாக்பூர் தன்தோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் வீட்டில் இருந்து ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அந்த கடிதம் 4 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதில் மரணம் மீதான ஈர்ப்பு, வெளிநாட்டு சித்தாந்தம், நாசிசம், ரஸ்சிய கலாசாரம், மெட்டா பிசிக்ஸ் பற்றி மாணவி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

