முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 01.02.2025 அன்று அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 01.02.2025ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.