யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அது கிடைத்த பின் கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைகளை முடிவுக்கு கொண்டவரும் எனவும் ஆகவே அதுவரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.