தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது.
வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் 60 வயதுடைய ஆண் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
மனைவி 60 வயதுடைய ஆண் ஒருருடன் காதல் வயப்பட்டதால் கோபமடைந்த கணவன் பலமுறை எச்செரித்துள்ளார்
கணவனின் ஆலோசனையை கேளாது மனைவி அவரது காதலை தொடர்ந்ததுடன் கதலனோடு அவரது வீட்டில் படுக்கையை பகிர்ந்துள்ளார்
விடயமற்pந்து வீட்டிற்கு வந்த கணவன் தனது மனைவியையும் மனைவியின் காதலனையும் தாக்கிய காயப்படுத்தியுள்ளார்
அப்போது ஆண் உயிரிந்துள்ள அதே வேளை மனைவி காயங்பளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொலையைச் செய்த சந்தேக நபர் கைது செய்யபப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.