கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த குரங்கு கூட்டம் ஒன்று அங்கிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் சிப்ஸ், முறுக்கு அடங்கிய உணவு பொதிகளை எடுத்துச் சென்றுள்ளது.
மதுபான போத்தல்களை எடுத்துச் சென்ற குரங்குகள் மதுபானத்தை அருந்தும் காட்சிகள் ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
அந்த குரங்குகள் சிப்ஸ், முறுக்கு அடங்கிய உணவு பொதிகளை உண்ணும் காட்சிகளும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான விடங்களுக்கு அதிகம் முகங்கொடுப்பதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.