சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை அரச அனுமதியுடன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ஒருவர், புலியின் சிறுநீரகத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இதை பயன்படுத்தினால் முடக்கு வாத நோயை குணப்படுத்த முடியும் என்று கூறி 250 கிராம் சிறுநீர் பாட்டிலின் விலை சுமார் 50 யுவான் இலங்கை மதிப்பில் ரூ.1800)-க்கு விற்கப்படுவதாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அத்துடன் இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து குடித்தால் அல்லது வலி இருக்கும் இடத்தில் தடவினால் வலி குணமாகும்.
ஆனால், இதை எடுக்கும் போது உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என விறிபனையாளர் ஆலோசனை வழய்கியுள்ளார்
;.இதற்காக புலிகள் சிறுநீர் கழித்த ஒரு தொட்டியில் இருந்து சிறுநீர் நேரடியாக சேகரிக்கப்படுவதாக இதனை விற்பனை செய்பவர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர்
இவ்வாறு விற்பனை செய்ய அவர்களிடம் வணிக உரிமம் மற்றும் செயல்பட அனுமதி இருப்பதால் அதை விற்க அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், புலியின் சிறுநீரில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என சீனாவின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

