மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றி மீட்டு வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர்
33 வயதுடைய இளம் குடும்பஸ்த்தரான கணேசமூர்த்தி ரமேஸ் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணேசமூர்த்தி ரமேஸ் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் மீண்டும் காப்பாற்றும் நோக்கில் குளத்தில் தேடிய போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

