இந்தியா

தாயுடன் தகாத உறவு வைத்த ஆண் ஒருவரை கொலை செய்து குடலை உருவி துண்டு துண்டாக வெட்டிய மகன்கள்

தாய் உடன் தகாத உறவை வைத்திருந்த கொத்தனாரை, அந்த பெண்ணின் இரண்டு மகன்கள் கத்தியால் குத்தி, குடலை உருவி எடுத்து வானத்தை நோக்கி வீசியதுடன், துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிராமம் ஒன்றில் விதவை தாயும் அவரது மகன்களான சஞ்சய் தாகூர் (வயது 27), ஜெயேஸ் தாகூர் (23) ஆகிய இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்த பெண்ணிற்கு மேசன் வேலை செய்து வந்த 53 வயதான ரடன்ஜி தாகூர் என்பவர் உடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த உறவு பல வருடங்களாக நீடித்துள்ளது.

இருவருக்கும் இடையிலான உறவு, அந்த பெண்ணின் மகன்களுக்கு பிடிக்கவில்லை.
இது தொடர்பாக பலமுறை ரடன்ஜி தாகூரிடம், தாய் உடனான தகாத உறவை நிறுத்திக் கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் ரடன்ஜி தாகூர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.
தனது அம்மாவை இழிவுப்படுத்துவதாகவும், மறைந்த அப்பாவை கலங்கப்படுத்துவதாகவும் மகன்மார் இருவரும் கருதினர்.

அத்துடன் உறவினரகளும் ; இரு ஆண் பிள்ளைகளையும் பார்த்து ஏளனமாக பேசியது மகன்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் ரடன்ஜி தாகூரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

இந்த வார தொடக்கத்தில் இவர்களின் வீட்டருகே ரடன்ஜி தாகூர் வந்தபோது, இரண்டு மகன்களும ரடன்ஜி தாகூரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் ரடன்ஜி நிலைகுலைந்தார்.

உடனே இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தினர்.

இதில் ரடன்ஜி தாகூரின் குடல் கீழே சரிந்தது. இருந்தபோதிலும் அவர்களுடைய ஆத்திரம் அடங்கவில்லை.

குடலை எடுத்து வானத்தை நோக்கி வீசி, துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளனர்.
இவை அனைத்தும் பட்டப்பகலில் பெரும்பாலானோரின் முன்னிலையில் நடந்துள்ளனர்.

சிலர் இதை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் பலனில்லை. தங்கள் ஆத்திரம் தீர்ந்ததும் வண்டியில் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என