மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் நேற்று (29-01-2025) அதிகாலை மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து,
மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஸ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.
‘ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது.
மேலும், கூட்டத்தினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் குதித்து, அங்கிருந்தவர்களையும் நசுக்கியது.
கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்
உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
அண்ணளவாக ஏழரை கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று (புதன்கிழமை) நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்த பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

