முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாததால் நேற்று (29) வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டன.
இந்நிலையில் இதுகுறித்து நோயாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஊடனடியாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி மற்றொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளார்
அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு நேரடியாகச்சென்று வைத்தியசேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியருடன் கலந்துரையாடியதுடன், வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்துக்கொண்டார்
