ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர்.
பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் ஒரு தாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

