இலங்கையில் பெறும் சாரதி அனுமதிபத்திரத்தினை இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவும் இத்தாலியில் தொழில் விசா பிரச்சினையை தீர்த்து இலங்கையருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பினை பெறுவது தொடர்பில் விஜித்த ஹேரத் இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் விஜித்த ஹேரத்திற்கும் இலங்கைக்கான இத்தாலி நாட்டு தூதுதவர் டெமியானோ பிரென்கோவக் ஆகியோருக்கிடையில் அண்மையில் வெளிவிவகார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது இத்தாலியில் தொழில் விசா பெற்றுக்கொள்வதை இடை நிறுத்தியுள்ளமை தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்தபோது, இத்தாலி அரசாங்கம் பல நாடுகளுக்கு தொழில் விசா வழங்குவது தொடர்பில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியுதுள்ளடன் அது தற்காலிக நடவடிக்கையாகும் என தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் விசா வழங்குவதை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தபோது, அது தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.