முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருகேசு ஜனகன் (வயது 18), நாதன் பவளநாதன் (வயது 29), சுப்பிரமணியம் திவாகரன் (வயது 23), குணரத்தினம் சிவராஜன் (வயது 23) உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலைகள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு; 13 பொலிஸாருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இங்கு 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டியவினால் அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர், மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல