பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிலையில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிசார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர் என ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி,
வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிசார் மீது மக்கள் குற்றம் சுமத்தினர்
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிசார் உடந்தையாக இருப்பதாக மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சரும் தெரிவித்தார்.