அதீத போதை காரணமாக சுகயீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென சுகவீனமுற்று யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிக போதையின் போது நண்பர்களுக்கிடையில் கைகலப்பு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்