நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது
பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப்பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும்.
சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
மாறாக சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்படவோ நிறுத்தப்படவோ அல்லது பௌத்தமயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை.
இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை தமிழர்தேசத்தை அழித்து ஆக்கிர மித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது.
காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாக பிரகடணப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவதுபோல் இம்முறையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி பாடசாலை மாணவர்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிநிகள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப்பட்டிகள் அணிந்தும் கறுப்புக் கொடிகளை ஏந்தியும் வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் பல்கலைக்கழகம் கல்லூரி பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவுப்பதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரின் எதிர்ப்புப்போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்தத மிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது என அதில தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக்கொள்வதுடன் புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும் தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோரின் இணைய வழிகண்டன எதிப்பு கருத்தாடல் நிகழ்வு பெப்ரவரி 4 இல் ஏற்பாடுசெய்துள்ளது.
இதில் ஐரோப்பிய கனேடிய இளையோர் பங்குபற்றுவது குறிப்பிடத்க்கது.
சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலைஅடையும் நாளே தமிழர்களின் தமிழர் தேசத்தின் சுதந்திர நாள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது