உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அசாத் மௌலானாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது நீக்கப்பட்டுள்ளது.
அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு பிள்ளையான் அழுத்தம் பிரயோகித்ததாக பொலிசில் முறையிடுமாறு சாய்ந்தமருது பொலிஸார் அசாத் மௌலானாவின் மனைவிக்கு அழுத்தம் கொடுத்ததாக உதய கம்மன்பில குற்றம் மத்தியுள்ளார்
இதன் பின்னணியில் உள்ள அரச சக்தி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என உதய கம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொழும்பில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாhர்