இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
தனது”X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் ருளுயுஐனு இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க தனது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் ருளுயுஐனு இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை, எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று நாமல் ராஜபக்ஸ அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.