யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் ( நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் ளுpழசவள குழச னுநஎநடழிஅநவெ ரூ PநயஉநJSAC) unicef செயற்றிட்டத்தினூடாக அண்மையில் வடக்கின் இளம் பெண்களுக்கான மாபெரும் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி (Northern Cricket Carnival) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது
இந்த துடுப்பாட்ட போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 70 யுவதிகள் விளையாடினர்
இந்நிகழ்வில் unicef நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சர்மிலி சதீஸ், பிரதேச செயலர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு கழகங்கள், துடுப்பாட்ட ரசிகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பார்த்து ரசித்தனர்
வடக்கில் முதன்முதலாக இடம்பெற்ற பெண்களுக்கான கடின பந்து போட்டி என்பதுடன், பெண்கள் மத்தியில் துடுப்பாட்ட ஆர்வத்தினை அதிகரிக்கின்ற வகையில் இத்துடுப்பாட்ட போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.