முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான உயர்நீதமன்றத்தின் தீர்மானம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை – சபாநாயகர்

உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரையில் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் அறிவிக்கிறார்.

இது முற்றிலும் பாரதூரமானது. ஆகவே அமைச்சரவை பேச்சாளர் தனது கருத்தை மீறப்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் யார் கூறுவதை ஏற்பது என கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை பொறுமையுடன் இருங்கள் என் மீது நம்பிக்கை உள்ளது தானே ஆகவே நான் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய போது ஜனாதிபதியின் அறிவிப்பு, குழுக்களின் அறிவிப்புக்களை சபாநாயகர் சபைக்கு அறிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல