இந்தியா முக்கிய செய்திகள்

13 வயது பாடசாலை சிறுமியை அப் பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர்

கிருஸ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு சிறுமி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

கிருஸ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 13–19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளனர்.
இது 2023-ம் ஆண்டை விட சுமார் 35 சதவீதம் அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம் குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாக செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை.
பெண் குழந்தைகள் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஸோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை எதையும் தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஒருபுறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம்; மற்றொரு புறம், அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க. அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்திருக்கிறது.

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு கடும் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என