முக்கிய செய்திகள்

இன்டர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மூவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டவரப்பட்டுள்ளனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களின் விபரங்களும் குற்றச் செயல்களும் பின்வருமாறு ;

01. 42 வயதுடைய ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா ;
முகவரி – காலி உரகஸ்மன்ஹந்திய
குற்றச் செயல்கள் – 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்தை பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தங்காலை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரும் ஆவார்.

02. 40 வயதுஐடுயு கந்தகம தெனியே கெதர பிரதீப் கந்தருவன் எனப்படும் சந்தன
முகவரி – கொலன்னாவை

குற்றச் செயல்கள் – 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் காயப்படுத்தல்,பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் , 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல் ,

மேலும் , 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தல் மற்றும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடரப்புடையவர் ஆவார்.

03. 39 வயதுடைய நாடகந்தகே உபாலி எனப்படும் ரொட்டும்ப உபாலி
முகவரி – புவக்வத்தை, தென்கந்தலிய

குற்றச் செயல்கள் – 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் நபரொருவரை வெட்டிக் கொலை செய்தல், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மாவரல பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடரப்புடையவர் ஆவார்.
இவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல