முக்கிய செய்திகள்

அஸ்வெசும திட்டம் தொழில்நுட்ப அடிப்படையற்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘எதிர்காலத்துக்கான பட்ஜெட்’ என்ற தொனிப்பொருளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமை நிலை தொடர்பில் சரியான தரவுகள் அரசாங்கத்திடமும் இல்லை.

வறுமை நிலை அதிகரித்தமை தொடர்பில் சர்வதேச நிறுவனமொன்று தரவுகளை வெளியிட்டிருந்தது. அதற்கமைய மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமையிலிருப்பதாகக் கூறப்பட்டது.

அந்த வகையில் முன்னர் காணப்பட்ட வறுமை நிலைமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களை விட, அஸ்வெசும வேலைத்திட்டம் சிறந்தது எனக் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அது திட்டமிடலற்ற, பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்ட, தொழிநுட்ப அடிப்படையிலன்றி, தரவுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, முன்னர் காணப்பட்ட சமூர்த்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும சிறந்த திட்டம் எனக் குறிப்பிடுவதற்கான காரணம் அவற்றில் காணப்பட்ட அரசியல் தலையீகளை விட இத்திட்டத்தில் அவ்வாறான போக்கு அவதானிக்கப்படவில்லை என்பதனாலாகும்.
எனவே முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும திட்டத்தில் சிறந்த விடயங்கள் பல காணப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பண பரிமாற்றம் வங்கி முறையூடாக முன்னெடுக்கப்படுதல் உள்ளிட்டவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றோம்.
தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதில் காணப்படும் ஆர்வமின்மை இலங்கையில் காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல