பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தினார் என கூறி நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் வலிந்து வாக்குவாதப்பட்டதுடன் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியுள்ளார்
இதில் தற்பாதுகாப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தாக்குதல் தாக்கியதில் காயமடைந்தவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரியவருகின்றது
சம்பவம் நொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.