முக்கிய செய்திகள்

இலங்கையை டிஜிட்டல் பொருளாதார மயமாக்குமாறு ஒரகல் நிறுவனத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (றுபுளு) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11-02-2025 ) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (ழுஊஐ) வழங்க விருப்பம் குறித்த நிறுவனம் தெரிவித்ததுடன், தரவு சுயாதீனத் தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிப்தற்கும் முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில்

ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறு ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (யுஐ) மற்றும் கிளவுட் (ஊடழரன ர்ரடி) மையமாக செயற்படும். அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைக் சிசிலியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

பிராந்திய அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான ஒரகல் நிறுவனத்தின் நோக்குக்கு அமைய அதன் தெற்காசிய செயற்கை நுண்ணறிவு (யுஐ) மற்றும் கிளவுட் (ஊடழரன ர்ரடி) மையமொன்றை கொழும்பு துறைமுக நகரில் அமைப்பதற்கு ஒரகல் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக அந்த

நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் தெரிவித்தார். இது ஒரு மூலோபாய நடவடிக்கை என்ற வகையில் செயற்கை நுண்ணறிவின் ஊடாக செயற்படுத்தப்படும் கிளவுட் வசதிகளில் இலங்கையை பிராந்தியத்தின் முன்னோடியாக மாறுவதற்கு உதவும். அதேபோல் அரச – தனியார் கூட்டு முயற்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் அடித்தளமாக அமையும்.

அதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில், நிர்வாக வினைத்திறன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்காக பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, அநுர குமார திசாநாயக்க, , இலங்கையின் டிஜிட்டல் பரிணாம செயன்முறையில் முக்கிய பங்கை வகிக்க முன்வருமாறும் ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல்மாகாண ஆளுநர் ஹனீஸ் யூசுப் உள்ளிட்டவர்களும் இந்த கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல