முக்கிய செய்திகள்

ஜேவிபியின் யாழ் மாவட்ட எம்பிக்கள் நால்வரையும் ஒருவர் வெருளி என்கிறார் மற்றொருவர் வெங்காயமென்கிறார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களிடம் இதுதான் நீங்கள் வழங்குகின்ற நீதியா என கேள்வி கேளுங்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்க ஒருவர் இருக்கின்றார் ஜேவிபியின் பிரதான நபர் சந்திரசேகரன் என்று,இன்று அவர் அதிகாரம் படைத்த நபராகயிருக்கின்றார்.

தயவு செய்து அவரை எங்கே சந்தித்தாலும், இதுதானா உங்கள் நீதியா என கேளுங்கள். அவர்களை வேறு எதற்கும் அனுமதிக்கவேண்டாம் முதலில் கேளுங்கள்.

உலகிலேயே நீதிவாய்ந்தவர்களாக இடதுசாரி தத்துவம் பேசுபவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் எந்தவித நீதியும் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்களின் கரங்களில் ( தையிட்டி விகாரைக்கு முன்னாள் பொலிஸார் படையினர்) ஒரு ஆவணமில்லை, வீதியை மறிப்பதற்கு ஒரு ஆவணம் தேவை,ஒரு ஊடகவியலாளரை மறிப்பதற்கு ஒரு ஆவணம் தேவை.

இது வெறுமனே தங்களிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்கள், அதிகார துஸ்பிரயோகம்தான் இங்கு இடம்பெறுகின்றது , அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியது யார்? இந்த அரசாங்கம்

இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு வெங்காயங்கள் இங்கு உள்ளனர், இதுதான் நீங்கள் வழங்குகின்ற ஆட்சியா என கேளுங்கள் எங்கு கண்டாலும் கேளுங்கள்.

இங்கிருந்து வாக்களித்த மக்கள் முதலில் வெட்கப்படவேண்டும்.

இதேமாதிரியான அதிகாரபோக்கையும் அக்கிரம போக்கையும்தான் நாங்கள் இதுவரை கண்டிருக்கின்றோம், இதன் தொடர்ச்சியை தான் இந்த அரசாங்கமும் இதுவரை செய்கின்றது.

இந்த அரசாங்கத்தின் நபர்களை எங்கு சந்தித்தாலும் நீங்கள் கேட்கவேண்டிய முக்கிய கேள்வி- இந்த விசர்க்கூத்துக்களை காட்டாமல் மக்களிற்கான நீதியை வழங்க சொல்லி கேளுங்கள்

சாதாரணமாக அனைத்து மக்களிற்கும் சமமாக இருக்ககூடிய சட்டம் தையிட்டியில் உள்ளவர்களிற்கு மாத்திரம் வேறுமாதிரியாக உள்ளது என்றால் இது என்ன நாடு?

இதனை தட்டிக்கேட்கின்ற ஆட்களை நோக்கி எவ்வளவு பேர் கேள்வி கேட்கின்றார்கள் யாரை நோக்கி கேள்வி கேட்கவேண்டும்?அதிகாரத்தையும் இந்த அரசாங்கத்தையும் நீதிமுரணாக செயற்பட்டவர்களை நோக்கிதான் எப்போதும் கேள்வி கேட்கவேண்டும்.

ஆனால் கேள்விகள் யாரை நோக்கி கேட்கப்படுகின்றது போராடுகின்ற மக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நோக்கி கேட்கப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல