முக்கிய செய்திகள்

தமிழரசுக்கட்சியின் உட்கட்சி விவகார வழக்கு தொடர்ந்தும் இழுபறி நிலையில்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கானது அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்வதற்கு இடமளிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி எதிராளி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே வழக்கு விசாரணை குறித்து ஆராயப்படும்.

இவ்வழக்கு வியாழக்கிழமை (13) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது.

இருப்பினும் வழக்கின் பிரதிவாதிகளான பா.உ சிறிதரன், பா.உ குகதாசன் மற்றும் முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கடும் தர்க்கம் இடம்பெற்றது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த விபரங்களை தாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கையில், சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சிக்குத் தெரியாமல், முன்னைய இணக்கப்பாடுகளுக்கு மாறாக தாமாகவே ஒரு திட்டத்தை முன்வைத்து, இணக்க முயற்சிகளை வேண்டுமென்றே குழப்ப முயற்சிக்கின்றனர் என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.

வழக்கின் பிரதிவாதிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக மன்றில் சுட்டிக்காட்டிய வாதிகள் தரப்பு சட்டத்தரணி, எனவே இதற்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகியிருப்பதாகவும், வழக்கு விசாரணை நடத்தியே தீர்வுகாணவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அப்பதவியிலும், உயிருடனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனையடுத்து வழக்கில் அவரது இடத்துக்கு பதில் தலைவரின் பெயரை பிரதிவாதியாக சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல