முக்கிய செய்திகள்

நாட்டில் இன்று பலவீனமான ஆட்சியே உள்ளதென்கிறார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14-02-2025 ) நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமணப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

10 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தமது வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது.
அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இன்று, நாடு பயணிக்கும் பாதை தெளிவாக தெரிகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெளிப்படையான கொள்முதல் முறைகளின்படி இடம்பெற வேண்டும்.
முதலீட்டாளர்களை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
2028 ஆம் ஆண்டளவில் நாம் கடனைச் செலுத்த வேண்டும் என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் .
நாடு செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டுமானால் அரசு அதிக வருமானத்தையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்குகளையும் அடைய வேண்டும்.
இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஒரு நாடாக எம்மால் மீண்டு வர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இவ்வாறே சென்றால் இன்னுமொரு கடன் மறுசீரமைப்பிற்குச் செல்ல வேண்டி வரும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள், அவர்களுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளின் இலக்குகளை நாம் அடையாவிட்டால், மற்றொரு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த இணக்கப்பாடுகளில் காணப்படும் பலவீனங்களை ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதுடன் கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை இந்த அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது.
பல நிபுணர்கள் ஐஆகு ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர்.
அவர்களது பகுப்பாய்வுகளின் பிரகாரம், ஐஆகு உடன்படிக்கைக்கு வந்த 59மூ நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்புக்கு சென்றுள்ளன என வெளிப்படுத்தியுள்ளனர்.
இது இங்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.

மற்றொரு கடன் மறுசீரமைப்பை நாடுவது நாட்டிற்கு ஒரு பேரழிவாகும்.
குறுகிய பிரச்சினைகளை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஆதாயம் தேடாது.
நாடு குறித்து சிந்தித்தே செயற்பட்டு வருகிறோம்.
இந்தத் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல