இந்தியா சினிமா முக்கிய செய்திகள்

பாடலாசிரியர் சினேகனின் இரட்டை குழந்தைகளின் பெயர் ஒரு குழந்தை காதல் மற்றைய குழந்தை கவிதை

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, தங்க வளையல் சூட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக சினேகன் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘காதலர் தினத்தில் … எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு … ‘காதல்’ என்ற பெயரையும் ‘கவிதை ‘ என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் – கவிதை-யை’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,