முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் தமிழ் கடத்தல்காரரான விக்னேஸ்வரமும் அவரது மனைவியும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் 

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபர் 30 வயதுடைய புஸ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார்.

பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார்.

சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (டீஐயு) வந்தடைந்தவுடன், விக்னேஸ்வரமும் அவரது 25 வயதுடை ளஸ்ரீய மனைவியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (ஊஐனு) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் மீது 2017 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தமை, 2018 ஆம் ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை, 2022 ஆம் ஆண்டு கரையோரப் பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்தமை, கொட்டாஞ்சேனையில் ஹெரோயின் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல