கல்வித் தகமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் எனத் தெரிவித்துள்ளாh். .
நாடாளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளாh்.
மேலும் சான்றிதழ்களை வழங்க நாடாளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை இழிவான தந்திரோபாயங்கள் எனத் தெரிவித்த அவா் தாங்கள் நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறோம் எனவும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கல்வித் தகுதிகள் குறித்து பொதுமக்கள் விசாரித்ததைத் தொடர்ந்து, ரன்வல இரண்டு மாதங்களுக்கு முன்பு பதவி விலகியிருந்தாh்.
எந்தவொரு தவறான கூற்றுகளை மறுத்தாலும், ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தை சரிபார்க்க தேவையான சில ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது பதவி விலகலைப் பற்றி குறிப்பிட்ட அசோக சபுமல் ரன்வல , அரசியல் என்பது ஒருபோதும் பதவிகளைப் பெறுவது பற்றியது அல்ல, எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வரும் எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் அதன் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம்.
அதுதான் எங்கள் அரசியல். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பொதுமக்களிடையே சந்தேகங்கள் எழுவதைத் தடுக்கவே தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.