முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கூடவுள்ளது

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை 10.00 am மணியளவில் நடைபெறவுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது முதலில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வழக்குகளை விரைந்து இணக்கத்துடன் முடித்து வைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
ஏலவே கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற நிருவாகத்தெரிவுக்கு எதிராக திருகோணமலையில் தாக்கச் செய்யப்பட்ட வழக்கு ஜுன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அடுத்தவிடயமாக, புதிய யாப்புருவாக்கச் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கைக்கு இறுதியான பதிலளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அதற்கடுத்தபடியாக, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்து களமிறங்குவது, அதில் காணப்படுகின்ற சாதகமான, பாதமாக நிலைமைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த 8ஆம் திகதி மேற்படி நிகழச்சி நிரலுடன் மத்திய குழுக் கூட்டத்துக்கு திகதியிடப்பட்டிருந்தபோதும், கட்சியின் அரசியல்குழுவின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மரணத்தினை அடுத்து அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல