இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க செயல்திறன் துறை னுழுனுபுநு நிறுத்தியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதார்.
அரசின் தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய னுழுனுபுநு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் ருளுயுஐனு அமைப்புக்கான நிதி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தற்போது இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவதாக னுழுனுபுநு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டொலர், நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர், பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து கம்போடியாவில், பராகுவே, செர்பியா,தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

