எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஸ்சியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஸ்சியாவிக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று (17-02-2025) காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஸ்சிய டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஸ்சியாவின் டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ரஸ்சியா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது

