முக்கிய செய்திகள்

2025 வரவு – செலவுத்திட்டத்தில் வருமானம் 4,990 பில்லியன் ரூபா மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாவாகும்

சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார்

2025 ஆம் ஆண்டு 5 வீதம் பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.
மீண்டெழும் செலவுகளுக்கு 4மூ நிதி ஒதுக்கீடு.
மக்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.
கைத்தொழில், வர்த்தகம், மற்றும் உற்பத்தித் துறையில் அதிகளவான மேம்பாட்டை எதிர்பார்க்கிறோம்.
பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.
மக்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு.
2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை முறையாக செலுத்துவோம்.
ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
அரச – தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்படும்
பொருளாதார பரிமாற்ற சட்டம் திருத்தம் செய்யப்படும்
தரிசு நிலங்களாக உள்ள அரச காணிகள் குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும்
அரச – தனியார் பங்குடைமை தொடர்பில் புதிய சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும்
காணிகளின் உச்ச பயனை பெற ‘பிம்சவிய’ திட்டம் அமுல்படுத்தப்படும்
சட்டவரைபாக காணப்படும் வங்குரோத்து தொடர்பான வரைபு வெகுவிரைவில் சட்டமாக்கப்படும்
தேசிய தரவு கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்
கொழும்பு துறைமுக முனையங்கள் அபிவிருத்திக்கான திட்ட மனுக்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்படும்
சகல பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்ப்பு.
டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தலுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக புதிய சுற்றுலாத்தலங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
ஜப்பான் நாட்டு முதலீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் நிர்மாணிக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதி இல்லை. வாகனம் இல்லை.
சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை மேம்பாட்டுக்காக நடப்பு வங்கி கட்டமைப்புடன் அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும்.
அரச செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும்.
சுங்க சட்டம் திருத்தம் செய்யப்படும்.
அதிக பராமரிப்பு செலவுகளை கொண்டுள்ள சகல அதிசொகுசு அரச வாகனங்கள் எதிர்வரும் மாதம் ஏலத்தில் விடப்படும்.
கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் கூட்டிணைக்கப்படும்.
அரச முயற்சியாண்மைக்கான பரிபாலன சபை ஸ்தாபிக்கப்படும்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு.
தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பௌதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : மருந்து தட்டுப்பாடு ஏற்படாது.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு.
முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.
ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தேர்தலுக்காகவே யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது :யாழ். நூலக அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஏனைய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் புதிதாக 2,80000 பயனாளர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பு.
நீரிழிவு நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாகவும் அதிகரிப்பு.
சிறைச்சாலை, சிறுவர் நன்னடத்தை மத்திய நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் சிறுவர்களின் நலன் கருதி விசேட திட்டங்கள்.
சிறுவர் மற்றும் இளைஞர் உளவியல் பிரச்சினையானது சமூக பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் திட்டங்களை அமுல்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். நிவாரண பொதி வழங்கப்படும். இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
கிராமிய வீதி அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கழிவு முகாமைத்துவ வசதிகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
யானை – மனித மோதலை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அரச சேவையாளர்களின் சம்பளம் 15, 500 ரூபாவால் அதிகரிப்பு.
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
ஊடகவியலாளர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கொட்டாவ பகுதியில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு.
இலங்கையர் தினம் என்ற பெயரில் தேசிய நிகழ்வு கொண்டாடப்படும்.

அரசியல் பரிந்துரைகளுடன் அரச நியமனம் மற்றும் அரச தொழில்வாய்ப்புக்கள் இனி இல்லை.
தனியார் துறையினரின் 21 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026 ஜனவரி மாதம் 30 ஆயிரமாகவும் அதிகரிக்க தனியார் தரப்பின் சேவை வழங்கல் சங்கம் இணக்கம்.
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மீள்பரிசீலிக்கப்படும்.
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
புதிதாக வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை.தி ருத்தங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு மக்களை இனி இன,மத,மொழி என்ற அடிப்படையில் பிளவுபடுத்த முடியாது. வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கம் முறையாக செயற்படுத்தப்படும்.
வரவு – செலவு திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய திறைசேரியின் செயலாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை நிறைவு செய்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான 79 ஆவது வரவு – செலவுத்திட்டத்தின் ஜனாதிபதியின் முழுமையான உரையை மும்மொழிகளிலும் பார்வையிட –

 

 

2025 ஆம் ஆண்டுக்கான 79 ஆவது வரவு – செலவுத்திட்டத்தின் ஜனாதிபதியின் முழுமையான உரையை மும்மொழிகளிலும் பார்வையிட – 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/275690/Budget_Speech_2025_Final.pdf

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல