மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

