கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது.
இதன் ஊடாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 55 வீதம் இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர்.
எனினும் மக்கள் தொகையில் 47 வீதமானவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையானது தற்போதும் ‘மோசமான நிலைமையிலேயே’ காணப்படுவதாக உணர்கின்றனர்.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான 71 வீதத்தைவிடக் குறைவாகும்.
தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 62 வீதமானவர்கள் அதை ‘அங்கீகரிப்பதாகக்’ கூறினர்.
இது முன்னைய 24 வீதத்திலும் பார்க்க இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
பதிலளித்தவர்களில் 16 வீதமானவர்கள் மாத்திரம் இதை ‘அங்கீகரிக்க மறுத்தனர்’.
இது முன்னைய ஆய்வில் 60 வீதமாக இருந்தது.
இதனிடையே ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரமானது முன்னேற்றமடைகிறதா அல்லது மோசமான நிலைக்கு செல்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த மக்கள் தொகையில் 55 வீதமானோர் ‘முன்னேற்றமடைகிறதாகப்’ பதிலளித்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்த கணிப்பீடானது 30 வீதமாகப் பதிவாகியிருந்தது. இலங்கையின் பொருளாதாரமானது ‘மோசமான நிலைக்குச் செல்வதாக’ 14 பேர் மாத்திரமே கூறியுள்ளனர். இது முன்னர் 65 வீதமாக இருந்தது.
மேலும் இலங்கையின் பொருளாதார நிலவரமானது ‘நல்ல நிலை’ அல்லது ‘சிறந்த நிலை’ அல்லது ‘மோசமான நிலையினைக்’ கொண்டுள்ளதா என மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்ட போது 35 வீதமானோர் பொருளாதாரமானது ‘நல்ல நிலை’ அல்லது ‘சிறந்த நிலைமையை’ கொண்டுள்ளது என தரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 2024 ஆம் ஆண்டு 28 வீதமாக காணப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதனிடையே இலங்கையின் பொருளாதாரமானது வீழ்ச்சியான போக்கினையே கொண்டுள்ளது எனவும் ‘மோசமான நிலையில்’ காணப்படுவதாகவும் 47 வீதம் பேர் தரப்படுத்தியுள்ளனர்.
முன்னைய ஆய்வில் குறித்த பெறுபேறானது 71 வீதம் ஆகக் காணப்பட்ட நிலையில் தற்போது 24 வீதமாக ஆகக் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

