உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாரே நீதிபதிகளாக மாறி தண்டனை கொடுப்பார்களாயின் நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமில்லை- மக்கள் போரட்ட முன்னணி செயற்பாட்டாளர் ரஜீவ்காந்

யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது.

இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை செய்துள்ளார்கள்.கொலைசெய்துள்ளார்.

இப்படி பல தடவைகளில் பல தடவைகளில் இப்படியான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை நாங்கள் கூறவில்லை ஏற்கனவே அனுரகுமார திசநாயக்க நாடாளுமன்றத்தில் ‘ ஒருவர் ஆயுதம் இருக்கென்று கூறுவார் அவரை அழைத்து செல்வார்கள், அவர் அந்தஆயுதத்தை எடுத்து பொலிஸாரை சுடுவதற்காக முயற்சி செய்வார் பின்னர் பொலிஸார் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுட்டார்கள் என்று இந்த கதையை கூறுவார்கள்,என தெரிவித்திருந்தார்.

இந்த கதை வந்து பல தடவைகள் தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட ஒன்று, இது பொய்யான கதை என்பது அனைவரும் அறிந்தது,பலரும் பல தடவைகளில் இதனை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரும் எப்படி ஆயுதம் இருக்கின்ற இடத்திற்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்கள்?அழைத்து சென்றார்கள் என்பது தொடர்பில் பூரண விளக்கமில்லை.

2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கிலே குற்றவாளிகள் யாரையாவது எந்த இடத்திற்காக கொண்டு செல்லவேண்டும் என்றால் அதனை வீடியோ வடிவிலே பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஆதாரம் இருக்கவேண்டும், எங்கே கூட்டிச்சென்றார்கள் என்ன நடந்தது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இது எதுவுமே,செயற்படுத்தப்படவில்லை இவர்கள் குற்றவாளிகள் தான? இல்லையா? எதற்காக கொலை செய்தார்கள் யாரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்தார்கள் என்ற விடயங்கள் என்பது எல்லாம் தெரியவராமலே இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

பொலிஸாரை பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதாகயிருந்தால்,நாளை எங்களில் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் செல்லவும் நீதிமன்றம் செல்லவும் குற்றவாளியென்றால், அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குமான அனைத்து சட்டதிட்;டங்களும் இலங்கையில் இருக்கின்றது.

இவ்வளவு அவசரஅவசரமாக பொலிஸார் இவர்களை கொலை செய்வதற்கான காரணம் என்ற கேள்வியை அரசை நோக்கி நாங்கள் எழுப்புகின்றோம்.

இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களிலே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.

எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் பல தடவை கைதுசெய்யப்பட்டிருக்கின்றோம், எந்த வித பாரிய வன்முறையிலும் ஈடுபடாத எங்களையே கைவிலங்குகளை போட்டுத்தான் அழைத்துச்செல்வார்கள்.

ஆனால் இரண்டுபேர் கொலைகளை செய்த இரண்டுபேரை எந்த கைவிலங்கும் இல்லாமலா அழைத்து சென்றார்கள் என்ற கேள்வி எங்களிற்குள்ளது.

அதுமட்டுமல்லாது தொடர்ச்சியாக எத்தனை காலம்தான் ஆயுதத்தை காட்டஎடுத்துச்சென்றார்கள் ஆயுதத்தை எடுத்து தங்களை சுட முயன்றார்கள் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என தெரிவிப்பார்கள்.

அவர்களிற்கு சரியான பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லையா அல்லது இந்த ஒரு பொய்கதைதான்அவர்களிடம் இருக்கின்றாதா என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் உள்ளது.

உண்மையிலேயே இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய காலமாக உள்ளது,

சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,.

இன்று நேற்றல்ல இலங்கையில் பலகாலமாக பாதாளஉலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்; என இந்தசூட்டு சம்பவம் இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் கொலைகள் மலிந்துபோகின்றநாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது.

இந்த கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்,அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் , பொலிஸார் கொலைகாரர்களாக மாறுவதை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் அனுமதிக்க முடியாது.

இந்த அரசாங்கம் ஏற்கனவே எதிர்கட்சியாகயிருந்தபோது தீவிரமாக எதிர்ப்பை தெரிவித்தஒரு அரசு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்