1989ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர திசநாயக்கவிற்கும் எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ணவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சரான தனது தந்தை 1989ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 8 பேரை கொலை செய்தார் என தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என எதிர்கட்சி உறுப்பினர் ரோகிணி கவிரட்ண தெரிவித்ததை தொடர்ந்து இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.
எனது தந்தை எவரையும் கொலைசெய்யவில்லை என ரோகிணி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கமகெதர மாத்தளையில் 140 இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன, விரைவில் உண்மைகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

