ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20-02-2025) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இது தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏழு சந்தேக நபர்களும் பல்வேறு பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான துப்பாக்கிதாரி பொலன்னறுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

