மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கும் சீன மக்கள் குடியரசின் தூதுக் குழுவினருக்கும் இடையே கண்டியில் உள்ள ஆளுநர் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சீனாவின் தேசிய இன விவகார அமைச்சர் (Minister of the National Ethnic Affairs) பென் யூ(Pan Yue) தலைமையிலான இக்குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சீனாவின் உதவியுடன் மத்திய மாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
குறிப்பாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் அதிகளவு சுற்றுலாத்துறையினரை கண்டிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படுகின்ற பௌத்த சமய கலாசார உறவுகள் மற்றும் உயர் கல்வித்துறையை அபிவிருத்தி செய்வது பற்றியும் பேசப்பட்டன.
மேலும், சீனாவில் மேற்கொள்ளக்கூடிய உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் குறித்தும் இதன்போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது

