உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டின் சமகால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி விமானப்படையினருடன் ஆராய்வு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கான ஒதுக்கீடுகளின் அளவு மற்றும் விமானப்படையில் தற்போது காணப்படும் தேவைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வையிஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட விமானப்படையின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்