யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (26-02-2025 ) இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது மணல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

