கடந்த வருடம் 17,000 சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (ளுடுஊநுசுவு) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சேர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல,
வயது வந்தவர்களுக்கு நிகழ்நிலை மூலம் 1,371 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள் 60 பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
16 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தேவையை வலியுறுத்துகிறது.
இதேவேளை, மொத்தம் 6,123 சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன, இது தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
அத்துடன், 673 தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான செயல்கள் பதிவாகியுள்ளன, இது அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

