மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கின்றதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு தடங்கலுமின்றி அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மெடி கெயார் நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களாக 05 உள்ளன. அதில் ஒன்று தான் சுகாதாரதத் துறை பற்றி மக்களுக்கு தெளிபடுத்தலாகும். இது மிக முக்கியமாதொன்று என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு – பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சிக் கூடத்தில் (டீஆஐஊர்) வெள்ளிக்கிழமை (28) மெடிகெயர் – 2025 இலவச மருத்துவ கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2025ம் ஆண்டுக்கான மெடிகெயர் இலவச மருத்துவ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, நவலோக்க வைத்தியசாலையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜயந்த தர்மதாஸ், இலங்கை வைத்தியதுறை சங்கத்தின் தலைவர் பிரசாத் கட்டுலந்த, மற்றும் பல்வேறு வைத்திய நிபுணர்கள் கலந்துக்கொண்டனர்.

