பதுளை ரயில் நிலையத்திற்கும் ஹாலி எல தொரூந்து நிலையத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையகத்திற்கான தொரூந்து சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கான தொரூந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை தொரூந்து நிலையத்திற்கும் ஒருகொடவத்தைக்கும் இடையில் உள்ள புளுமென்டால் தொரூந்து கடவையில் திருத்த வேலை இடம்பெறுவதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்கும் என தொரூந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

