உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த அன் கம்பனி ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் ஊடகவிலாளர்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01-03-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அரசாங்கம் பலமுறை குறிப்பிடுகிறது. ஆனால் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக தொடர்ந்து வரிசையில் உள்ளார்கள்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் பலமுறை கேள்வியெழுப்பினேன். ஆனால் இதுவரை அதற்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை (2009), திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை (2006), 11 தமிழ் மாணவர்கள் கடத்தல் – படுகொலை , கீத் நொயார் படுகொலை , லசந்த விக்கிரமதுங்க படுகொலை (2009), பிரகீத் ஹெக்னலிகொட ( 2010) உள்ளிட்டவை பிரதானவையாக கருதப்படுகின்றன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கடந்த மாதமளவில் பரவலாக பேசப்பட்டது.

சந்தேக நபர்களை விடுவிப்பதாக சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விடயத்தில் ஏதேனுமாரு மர்மம் உள்ளது.
ஏனைய படுகொலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன,

உதலகம ஆணைக்குழுவின் அறிக்கையில் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை தொடர்பில் பில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது.

2020 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை அமைத்தார்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் 11 மாணவர்கள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவராக பெயர் குறிப்பிட்ட வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்காமலிருக்க பரிந்துரைக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தாஜுதீன், பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட பலரின் வழக்கு விசாரணைகள் கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டன. இதற்கு அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

இலங்கை தமிழ்ச்சங்கம் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

ஐயாதுரை நடேசன், கந்தசுவாமி பாலனந்தராஜா, லங்கா ஜயசுந்தர, தர்மரட்னம் சிவராம், கண்ணமுத்து அரசகுமார், செல்வராஜா, செல்வரட்ணம், கிருஸ்ணபிள்ளை, பலீல், நவரட்ணம், சுகிர்தராஜன், கனநாதன், ஜோஜ், , சயதாஸ், ரஞ்சித் குமார், லக்மால் டி சில்வா, மனோஜன் ராஜ், விஸ்வநாத், பாஸ்கரன், விமலராஜன், ரவிசந்திரன் பாலச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராஜா ரவிவர்மன், நிலக்சன், சிதில்ராஜன், நிமலராஜன், சுபாஜினி, லிம்பியோ, தர்மலிங்கம், தேவகுமார், ரஸ்மி மொஹமட், லந்த விக்கிரமதுங்க, புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றுமு; சசிமதன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பானாலோர் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன. மக்கள் சிறந்த ஆணையை வழங்கியுள்ளார்கள். அதனை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி தப்பித்துச் சென்றார். ஆகவே இந்த கேள்விகளுக்கேனும் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்