உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். ஊடக அமையத்தில் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அஞ்சலிக்கப்பட்டார்

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இடதுசாரி கொள்கையை கொண்ட, 1949 முதல் 2025 வரையான அவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் தனக்கென்று ஒரு இடத்தை வகுத்து துணிச்சலுடன் செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் கடந்த ஜனவரி 19 ஆம் திகதியன்று காலமானார்.

இந்நிலையில், ஊடகத்துறையினர் மட்டுமல்லாது அரசியல் மற்றும் பொது அமைப்புகள் என அவரை நினைவுகூர்ந்து அஞ்சலித்துள்ளனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் செல்வக்குமார் அஞ்சலியுரையாற்றுகையில் –

புலனாய்வு செய்திக்கென தத்துரூபமான பொறிமுறையை வகுத்து செய்தியிடலை முன்னெடுத்து வந்த விக்டர் ஐவன் வடக்கின் தகவல்களையும் அச்சமின்றி துல்லியமாக அறிக்கையிட்டவர் என குறிப்பிட்டார்.

மேலும், வடக்கின் தமிழ் ஊடகப் பரப்பில் அனைத்து ஊடகங்களும் புலனாய்வு அறிக்கையிடலையே முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியதுடன்

தமிழர் தேசத்தில் நடத்தப்பட்ட சம்பவங்களையும் துயரங்களையும் அச்சமின்றி வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு உந்துதலாகவும் இருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்