உள்ளூர் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டத்தை இணை அனுசரணை நாடுகள் வரவேற்றுள்ளன

நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் – இணை அனுசரணை நாடுகள் வேண்டுகோள்

இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இணை அனுசரணை நாடுகள்வேண்டுகோள் விடுத்துள்ளன.

பிரிட்டன் வடஅயர்லாந்து கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடக்குமசடோனியா ஆகிய நாடுகள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் கடந்த வருடம் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்றதையும் அமைதியான ஆட்சி மாற்றத்தையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பையேற்று நான்கு மாதங்களே ஆகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இலங்கை இந்த மாற்றத்தை பயன்படுத்தி தான் எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு தீர்வை காணமுயலவேண்டும் என நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

நல்லிணக்க விடயங்கள் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பiயும் நிலங்களை மீள கையளிப்பது வீதித்தடைகளை அகற்றுவது வடக்குகிழக்கில் உள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கடந்தகாலங்களை நினைவுகூர அனுமதிப்பது ஆகிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

நம்பிக்கையை கட்டியெழுப்பி அது தொடர்ந்தும் நீடிக்கச்செய்வதற்கு சிவில் சமூகத்தினருக்கான தளத்தினை பாதுகாப்பது அவசியம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கண்காணிப்பது துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்.

இலங்கையின் அரசமைப்பின் அடிப்படையில் அதிகாரங்களை பகிர்வதற்கான ஆட்சி முறை சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றீடு செய்வது குறித்த தனது நோக்கத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.

புதிய சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற விதத்தி;ல் காணப்படவேண்டும் என நாங்கள் மீளவலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஊழல்ஒழிப்பு மற்றும் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை காண்பதற்கு அரசாங்கம் முயலும் தருணத்தில் எந்தவொரு முழுமையான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளும்இபாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றதாக கடந்தகால பரிந்துரைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாக சர்வதேச தராதரத்தினை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

காணாமல்போனோர் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான உள்நாட்டு அமைப்புகளின் பணிகளை மீண்டும் ஊக்கப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்